சென்னை: கணினி பாதுகாப்புத் துறை வல்லுநரான லக்ஷ்மண் முத்தையா என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் இன்ஸ்டகிராம் செயலியில் இருந்த தொழில்நுட்ப குறைபாடு ஒன்றைக் கண்டு பிடித்து சுட்டிக்காட்டினார்.
இதற்காக அந்த நிறுவனம் அவருக்கு ரூ. 20 லட்சம் பரிசளித்து முத்தையாவை மிகவும் பாராட்டி இருக்கிறது.
இன்ஸ்டகிராமில் முத்தையா சுட்டிக்காட்டிய குறைபாடு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
மறந்துபோன ரகசிய குறிகளைத் திரும்பப் பெறுவதற்காக கைபேசிக்கு அனுப்பப்படும் தகவல் ஏற்பாட்டில் குறை இருந்ததை முத்தையா சுட்டிக்காட்டி இருந்தார்.

