புதுடெல்லி: ஜெயலலிதாவின் அணுக்க தோழியான சசிகலாவின் காலமான கணவர் நடராஜன் ஒரு சொகுசு காரை இறக்குமதி செய்த போது வரி மோசடி நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் செலுத்தியை பிணைத் தொகையான ரூ.25 லட்சம் யாரிடம் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் விளக்கியது.
இப்போது உச்ச நீதிமன்றத்தின் வசம் உள்ள அந்தப் பணம், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடராஜன் மனைவி சசிகலா விடுதலையாகி வந்து, உச்ச நீதிமன்றத்தில் கோரினால் அவரிடம் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

