சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
2016ஆம் ஆண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதத்துடன் நிறைவடைந்த தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில் உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கான காரணங்கள் இருந்தன.

