கடலூர்: கடலூர் மாவட்டம் கட்டியம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பூமதி தம்பதியினருக்கு 10 மாதங்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தைக்கு இதயம் வலது பக்கம் இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து இதயத்தைச் சரிப்படுத்த கடலூர், புதுச்சேரி, சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கிய இத்தம்பதியர், சிகிச்சை செலவுக்கு 9 லட்ச ரூபாய் தேவைப்படுவதால் பணமின்றி சொந்த ஊருக்கே திரும்பி அரசக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, இந்திய அரசின் 'ராஷ்டிரிய பால் சுவஸ்திய காரிய கிராம்' திட்டத்தில் இலவச இதய சிகிச்சைக்கு 20,000 சிறுவர்கள் காத்திருப்பதாக சென்னை குளோபல் மருத்துவமனை குழந்தைகள் இதயநோய்ப் பிரிவு டாக்டர் என். அருள் நாராயணன் தெரிவித்தார்.

