கடலில் கொலை; 6 பேர் கைது: பெண் வழக்கறிஞர் தலைமறைவு

சென்னை: சென்னை அடையார் பகுதியைச் சேர்ந்த என். சுரேஷ் பரத்வாஜ், 50, என்ற தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு அவருடைய உடல் கடலில் வீசப்பட்டிருக்கக்கூடும் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல வீடுகளுக்குச் சொந்தக்காரரான பரத்வாஜ், திருமணம் ஆகாதவர். அவரை ஜூன் 21ஆம் தேதியில் இருந்து காணவில்லை.

வெளிநாட்டில் இருக்கும் அவருடைய உறவினர் ஒருவர் ஜூன் 27ஆம் தேதி போலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து பரத்வாஜ் தேடப்பட்டு வந்தார்.

போலிஸ் நடத்திய புலன்விசாரணையில் பரத்வாஜின் கைபேசியை அவருடைய கார் ஓட்டியாக இருந்த ஒருவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலிஸ் விசாரித்தது. ஒரு மாதத்திற்கு முன் ஒரு நாள் பரத்வாஜ் கைபேசியைக் காரிலேயே வைத்துவிட்டு ஆட்டோவில் அடையாரில் பிரித்தி என்ற பெண் வழக்கறிஞரைப் பார்க்கப்போனதாக கார் ஓட்டுநர் தெரிவித்தார்.

உடனடியாக போலிஸ் வழக்கறிஞருடன் தொடர்புகொண்டது. பரத்வாஜ் தன்னை பார்த்தது உண்மை என்றும் ஆனால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர் வீட்டுக்குப் போய்விட்டதாகவும் போலிசிடம் அந்த வழக்கறிஞர் கூறினார்.

பிரத்தியேக படச்சாதனங்களையும் கைபேசி பயன்படுத்தப்பட்ட இடத்தையும் ஆராய்ந்த போலிசார், பரத்வாஜும் பெண் வழக்கறிஞரும் ஆட்டோவில் காசிமேடுக்குச் சென்றதைக் கண்டுபிடித்தனர்.

அங்கு அந்த வழக்கறிஞர் பிரகாஷ் என்ற 30 வயது ஆடவருடன் தொடர்புகொண்டார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலிசார் பிரகாஷை பிடித்து விசாரித்தனர். பல உண்மைகள் அம்பலமாயின.

பரத்வாஜ் வீட்டில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணை பரத்வாஜ் விரும்பினார். அந்தப் பெண்ணுக்கு அவர் ரூ. 10 லட்சம் கடன் கொடுத்திருந்தார்.

பரத்வாஜின் ஆசைக்கு அந்தப் பெண் இணங்காததை அடுத்து தான் கொடுத்த பணத்தைக் கேட்டு அந்தப் பெண்ணை மிரட்டினார். அந்தப் பெண் பயந்துகொண்டு வேலையை விட்டுவிட்டார். இந்த நிலையில், பரத்வாஜ் பெண் வழக்கறிஞர் பிரித்தியுடன் தொடர்புகொண்டார். அவரோ பரத்வாஜ் மீது ஏற்கெனவே அந்தப் பணிப்பெண் புகார் தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார்.

அதிலிருந்து பரத்வாஜை விடுவிக்க ரூ. 65 லட்சம் செலவாகும் என்று சொல்லி பரத்வாஜிடம் இருந்து பணத்தை வழக்கறிஞர் பெற்றுவிட்டார். ஆனால் பரத்வாஜுக்கு எதிராக வழக்கு எதுவும் பதிவாகவில்லை.

இந்த நிலையில், வழக்கறி ஞரிடம் பணத்தைத் திருப்பி தரும்படி பரத்வாஜ் கேட்டார். ஆனால் அந்தப் பெண் வழக்கறிஞர் ஆறு குண்டர்களை அமர்த்தி பரத்வாஜை கொலை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த ஆறு பேரும் கைதாகி இருக்கிறார்கள். அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. பரத்வாஜை நடுக்கடலில் கொலை செய்து உடலை கடலில் போட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்று போலிஸ் குறிப்பிட்டு உள்ளது. விசாரணை தொடர்கிறது. பெண் வழக்கறிஞர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலிஸ் தேடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!