வாகன சோதனையில் சிக்கிய கூலிப்படை கொலையாளிகள்

வாகன சோதனையில் சிக்கிய கூலிப்படை கொலையாளிகள்

1 mins read

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்குட்பட்ட வழிவிட்டான், பழனிகுமார் என்ற இருவரைக் கைது செய்து பல ஆயுதங்களைக் கைப்பற்றினர். அவர்கள் கூலிப்படையினருடன் கொலை செய்து வந்ததாக தெரியவந்தது. விசாரணை நடக்கிறது.