சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், அனுமதியின்றி ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
மேலும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் கூறிவந்த நிலையில், ஜல்லிகட்டு நடத்த ஜூன் 1ஆம் தேதி முதல் தடையுள்ளதால், தற்போது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

