அரசுப் பள்ளி ஆசிரியர்களின் திறனை சோதிக்க சிறப்புக் குழு

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் திறனை சோதிக்க சிறப்புக் குழு

1 mins read

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் சிறப்பு குழுக்களை அமைத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பள்ளிக்கல்வித்துறையின் கொள்கைகள் பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்யவும் குழுக்களை அமைக்க வேண்டும்.

தொடக்கக் கல்வியில் மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகளை செய்தல் ஆகிய திறன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதில் தவறும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் ஒருவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் உத்தரவிட்டார்.