காமராஜர் கனவைக் கலைத்துவிடாதீர் என கமல்ஹாசன் ஆதங்கம்

காமராஜர் கனவைக் கலைத்துவிடாதீர் என கமல்ஹாசன் ஆதங்கம்

1 mins read

திருப்பத்தூர்: அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற காமராஜர் கனவை யாரும் கலைத்து விடக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதங்கத்துடன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூரில் நடைபெற்றது.

இதில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அற்புதத்தை செய்தவர் காமராஜர். அப்படிப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டும் தான் என்ற நிலைக்கு சென்று விடக் கூடாது.

ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற அவரது கனவை கலைத்து விட்டு, இப்போது கல்விக்காக மாணவன் தேர்வு எழுத செல்லக் கூடிய நிலையை உருவாக்கக் கூடாது என்ற கமல்ஹாசன், தம்முடைய வீட்டுக்கு காமராஜர் அடிக்கடி வந்திருக்கிறார் என்றும் தாம் அவரது மடியில் வளர்ந்த பிள்ளை என்றும் கூறினார்.