ஃபேஸ்புக் நண்பர் பேசாததால் புதுவை இளையர் புதுவகை மிரட்டல்

ஃபேஸ்புக் நண்பர் பேசாததால் புதுவை இளையர் புதுவகை மிரட்டல்

1 mins read

புதுச்சேரி: அரும்பார்த்த புரத்தை சேர்ந்த 29 வயது வினோத் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூரைச் சேர்ந்த சந்துரு என்ற இளையருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி கைபேசியில் பேசி வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக வினோத்திடம் சந்துரு பேசவில்லை. இதனால் வினோத் வீட்டில் இருந்த எலி மருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். அவரை புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனை அறிந்த சந்துரு வினோத்தை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் வினோத்திடம் பேசவில்லை. இதனால் சோகம் அடைந்த வினோத் மருத்துவமனையின் மேல்மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துவிடப் போவதாக மிரட்டினார். சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் சந்துருவுக்கும் வினோத்துக்கும் சமாதானம் செய்து வைத்த பிறகே வினோத் கீழே இறங்கினார்.