சென்னை: சென்னையில் பட்டப் பகலில் கத்தி, அரிவாளுடன் ரவுடிகளைப் போல மாணவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்ட சம்பவம் சென்னைவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏறபட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் கத்திக்குத்து, அரிவாள் வெட்டு வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே புகைந்து கொண்டிருந்த பிரச்சினை நேற்று மோதலாக வெடித்தது. நேற்று வழக்கம்போல் கல்லூரி முடிந்து ஒரே பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்தனர். அப்போது தகராறு மூண்டது. இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
நடுரோட்டில் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த போலிசார் மாணவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் ஒரு சிலரே சிக்கியதாக தெரிகிறது. ஆயுதங்களுடன் இருந்த மாணவர்கள் தப்பிவிட்டனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த போலிசார் மாணவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.. ஆனால் ஒரு சிலரே சிக்கியதாக தெரிகிறது. ஆயுதங்களுடன் இருந்த மாணவர்கள் தப்பிவிட்டனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.

