சென்னை: செப்டம்பர் மாதத்திற்குள் 7,500 பள்ளிகளில் 'ஸ்மார்ட் வகுப்பறைகள்' தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற மாணவ - மாணவியருக்கு இலவச 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், "செப்டம்பர் இறுதிக்குள் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் துவக்கப்படும். எழுபது லட்சம் மாணவருக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் 'ஸ்மார்ட்' அட்டை வழங்கப்படும்," என்றார்.
"புதிய கல்விக் கொள்கையில் இரு மொழிக் கொள்கைதான் அரசின் லட்சியமாக இருக்கிறது. மதிப்பெண் அடிப்படையில் சென்ற ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதலாக, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்," என்றும் அவர் கூறினார்.

