சென்னை: சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பான 'கோனா' முழு மின்சார காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலான மின்சார கார்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து நாட்டின் முதல் கோனா மின்சார காரை சென்னையில் அறிமுகம் செய்துவைத்து, அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018ல் தமிழக அரசு உடன் ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. அதன்படி, ரூ.2000 கோடி முதலீட்டில் சென்னையில் மின்சார கார்களை தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட்டது.
இதில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார காரான 'கோனா'வை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் மின்சார காரில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார்.
'கோனா' மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை பயணம் செய்யலாம் என்றும் 100 கிமீ வேகத்தை 9.7 நிமிடங்களில் எட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.30 லட்சம். இதில் டிரைவருடன் சேர்த்து 5 பேர் பயணிக்கலாம்.
இந்த காரில் 39.2 KWh பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 452 கி.மீ தூரம் வரை பயணிக்கும்.
100 கிமீ வேகத்தை 9.7 விநாடிகளில் எட்டலாம். கோனா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.30 லட்சம். டிசி முறையில் 6 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். ஏசி முறையில் 19 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். நாட்டின் 11 நகரங்களில் 15 விற்பனையாளர்கள் மூலம் கோனா கார் விற்பனைக்கு வருகிறது.

