நீர் தட்டுப்பாடு: மொட்டை போட தடை

நீர் தட்டுப்பாடு: மொட்டை போட தடை

1 mins read

விருதுநகர்: விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சுந்தர மகாலிங்கம் கோயிலில் மொட்டை போட கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அத்துடன் அடிவாரத்திலேயே மொட்டையடித்துவிட்டு கோயிலுக்கு வர பக்தர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 2 லட்சம் லிட்டர் குடிநீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன.