வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 32 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தனியார் வங்கிக்கு சொந்தமான அந்தப் பணம் பேருந்து நிலையத்தில் செயல்படும் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

