சென்னை: தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்புகளில் 80% வாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கும் சட்டம் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கையில், "ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களது வேலை வாய்ப்புகளில் 75% அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க சட்டம் உள்ளது.
"தமிழகத்திலும் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளிலும் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே தரப்படவேண்டும்," என்று கூறியுள்ளார்.

