திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து சிலுக்குவார்பட்டிக்குச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று பேகம்பூர் செல்லும் வழியில் 'பிரேக்' பிடிக்காமல் போய்விட, அதை நிறுத்துவதற்கு ஓட்டுநர் பெரும்பாடு பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பேருந்து ஓடிக்கொண்டிருந்தபடியே ஓட்டுநர் போட்ட சத்தத்தைப் பார்த்து அங்கு திரண்ட அப்பகுதி இளைஞர்கள் பெரிய பெரிய கற்களை சாலைகளில் போட்டு பேருந்தை நிறுத்தினர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

