கை வைத்தால் இசை வடிவில் குறள் ஒலிக்கும் சாதனம்

கை வைத்தால் இசை வடிவில் குறள் ஒலிக்கும் சாதனம்

2 mins read

ஆம்பூர்: தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும் சேவூர் ராமச்சந்திரனும் மறுப்பு ெதரி வித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இந்து அற நிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கும் தொடர்பிருப்பதாக தனியார் தொலைக்காட்சிஒன்று செய்தி ஒளிபரப்பியது.

இந்நிலையில், வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக அங்கு சென்றிருந்த இவ்விரு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

"தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்த இப்படிப்பட்ட பொய்ச் செய்தியைப் பரப்பியுள்ளனர்.

"பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் இதுதொடர்பாக பேட்டி எடுத்து பொய்த் தகவல்களைப் பரப்பியுள்ளனர்.

"இது சம்பந்தமாக சட்டரீதியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளதால் பத்திரிகையாளர் மன்றத்திலும் புகார் தெரிவிக்க உள்ளோம். எந்த ஆதாரமும் இல்லாமல் இச்செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி எங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்," என்று அவர்கள் கூறினர்.

"சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் எங்கள் பெயரைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாத நிலையில், வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இல்லாத ஒரு செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளனர்.

"இரு அமைச்சர்களுக்குத் தொடர்புள்ளது என்பது பிரச்சினை அல்ல. எங்களுடைய பெயரைக் குறிப்பிட்டு எங்களது படத்தையும் ேபாட்டு செய்தி வெளியிட்டதுதான் பிரச்சினை.

"அதிமுக அரசுக்கும் எங்களுக்கும் எங்களது குடும்பத்தாருக்கும் களங்கத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் வகையில் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ளனர்," என்று அவர்கள் கூறினர்.