களவுபோன ஐம்பொன் சிலைகளை வீசிச்சென்ற கொள்ளையர்கள்

களவுபோன ஐம்பொன் சிலைகளை வீசிச்சென்ற கொள்ளையர்கள்

1 mins read

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கரியமாணிக்கம் பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்து கடந்த மாதம் திருட்டுப் போன பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கோவில் முன்பு வீசி விட்டுச்சென்றுள்ளனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த சிலைகள் நேற்று காலை திரும்பவும் ஆலயம் அருகே இருந்தது குறித்து அர்ச்சகர் சீனிவாசன் கூறுகையில், "திருட்டுப்போன சிலைகள் மீண்டும் கோவிலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகம விதிப்படி பூஜைகள், பரிகாரம் செய்து கோவிலுக்குள் வைக்கப்படும்," என்றார்.