கள்ளக்காதல், கொலை, புலம்பல், சரண், பரபரப்பு

கள்ளக்காதல், கொலை, புலம்பல், சரண், பரபரப்பு

1 mins read

வேலூர்: வேலூரில் 43 வயது மாதை தான் கொலை செய்துவிட்டதாக புலம்பியபடியே போலிஸ் நிலையத்துக்கு வந்த ஒரு கொத்தனாரை விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததை அடுத்து போலிஸ் அதிகாரிகள் பரபரப்பாக மேல் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் போதையில் முன்னிலையான ரமேஷ் என்ற கொத்தனார், அங்கிருந்த அதிகாரிகளிடம் தான் கொலை செய்துவிட்டதாகக் கத்தினார்.

அதனை அடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி னார்கள்.

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவியான சுலோச்சனா, 43, என்பவருடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்த ரமேஷ், அந்தப் பெண்ணுக்குத் தன் சொத்துகளை எழுதி வைப்பதாக உறுதியளித்து இருந்தார்.

ஒருநாள் இருவரும் சந்தித்தபோது சுலோச்சனா, சொத்துகளைத் தன் பெயருக்கு எழுதிவைத்தால்தான் இனி தொடர்பு என்று சொன்னதைக் கேட்டு கோபம் அடைந்த ரமேஷ் வேலூர், ஓட்டேரி அருகே இந்திரா நகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சுலோச்சனாவை அடித்தே கொன்று சடலத்தை கழிவறைத் தொட்டியில் போட்டுவிட்டார்.

இந்த விவரங்கள் தெரிய வந்ததும் அதிகாரிகள், ரமேஷ் உதவியுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்குச் சென்று சுலோச்சனாவின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிணக்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து உள்ளனர்.

சந்தேகப் பேர்வழியிடம் விசாரணை தொடர்ந்து நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.