ஆண்டுதோறும் ஜூலை 30 அன்று மருத்துவமனை தினம்

ஆண்டுதோறும் ஜூலை 30 அன்று மருத்துவமனை தினம்

1 mins read

சென்னை: தமிழகத்தில் உள்ள எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஆண்டுதோறும் ஜூலை 30ஆம் தேதி மருத்துவமனை தினம் கொண்டாடப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மருத்துவமனை தினம் ஒவ்வொரு மருத்துவ மனையின் ஆண்டு விழா வாகவே கருதப்படும்.

இதற்காக மருத்துவமனை யின் தலைவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரக் கல்வி, சேவைகள் தொடர் பான கண்காட்சியை நடத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் சாதனைகள், சேவைகள், கண்டுபிடிப்புகள் எல்லாம் காட்சிப்படுத்தப்படும். சிறந்த ஊழியர்கள் அன்று சிறப்பிக்கப்படுவார்கள்.