சிவகங்கை: சிவகங்கையில் ரூ.60 லட்சத்துக்கு மேல் மின்திருட்டில் ஈடுபட்ட 45 தொழிலதிபர்களை மின்வாரியம் இணையம் மூலம் கையும் களவுமாகப் பிடித்தது.
தமிழகத்தில் மின்திருட்டை தடுக்க 17 அமலாக்கக் குழுக்கள், ஒரு புலனாய்வுக் குழு, முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்ட 43 குழுக்கள், ஒரு பறக்கும் படை எல்லாம் இருந்தாலும் மின்திருட்டு குறையவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 2018-19ல் மட்டும் 15,467 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.55 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

