28 மாணவர்களுக்குச் சிறை

28 மாணவர்களுக்குச் சிறை

1 mins read

திருச்சி: திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு மாணவர்களும் 4ஆம் ஆண்டு மாணவர்களும் மோதிக்கொண்டனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் உருட்டுக்கட்டை, கற்கள், போத்தல்களால் தாக்கிக்கொண்டதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதன் தொடர்பில் 28 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.