திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழும் மக்கள்

திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழும் மக்கள்

1 mins read

தர்மபுரி: எந்த ஒரு குற்றச்செயல்களும் நடக்காத வகையிலும் அப்படியே நடக்கும் சூழல் வந்தால்கூட அதைத் தடுக்கும் வகையிலும் ஒரு கிராம மக்கள் எப்போதும் விழிப்பு நிலையில் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சி.புதூர் என்ற ஒட்டுமொத்த கிராமத்தின் பல்வேறு இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்புக் புகைப்படக் கருவிகள் (படம்) பொருத்தப்பட்டு, மிகவும் பாதுகாப்பான சூழலில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், "சி.புதூர் கிராமம் கடந்த 2017ஆம் ஆண்டு சிறந்த மாதிரி கிராமமாகத் தேர்வு செய்யப்பட்டது. முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் நிறைய திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

"ஆடு, மாடுகள், பெண்களின் தாலி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்தோம். தற்போது திருட்டுச் சம்பவங்கள் பெருமளவு குறைந்துவிட்டது. மக்கள் பயமின்றி வாழ்கின்றனர்," என்றனர்.