நெல்லை: முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், அவர்களுடைய பணிப்பெண் உள்ளிட்ட மூவரையும் தனி ஆளாக நின்று தீர்த்துக்கட்டினேன் என்று கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கின் தொடர்பில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன், 39, என்பவரை போலிசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், "திமுகவில் பெரிய சக்தியாக வளரவேண்டிய எனது தாயார், உமா மகேஸ்வரி வருகையால் செல்லாக் காசாகிவிட்டார். இதனால் உமா மகேஸ்வரியை தீர்த்துக் கட்ட வெறி கொண்டு அலைந்தேன்.
"ஜூலை 23ந்தேதி நெல்லைக்கு வந்து உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரனிடம் பேசினேன். அப்போது உங்களால்தான் என் அம்மாவின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது என ஆவேசமாகக் கத்தினேன். அப்போது உமா மகேஸ்வரி வந்து 'இப்படி பேசக்கூடாது வெளியே போ' என்றார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான் மூவரையும் குத்திக்கொன்றேன்," என்றார்.

