பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்

1 mins read

பழனி: பழனி மலைக்கோயில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக நேற்று 29ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார், பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக் கார் மாதத்தில் ஒருநாளும் வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.