சிவகங்கை: கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் 2,000் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ள நிலையில் இங்கு உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிணறுகள் அனைத்தும் ஐந்து முதல் ஏழு அடி உயரம் வரையே இருப்பதால் 2,000 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் ஐந்து அடியிலேயே கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அத்துடன் உறைகிணறுகள் தொழில்நுட்ப ரீதியில் அமைக்கப்பட்டு அதனை தமிழர்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்தியதும் ெதரியவந்துள்ளது.
ஏற்கெனவே நடந்த நான்கு கட்ட அகழாய்வில் மூன்று கிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகழ்வாராய்ச்சியில் மிகப்பழமையான வட்டச்சுவரும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

