தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடுதி உணவில் வண்டுகள், புழுக்கள்

1 mins read

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் அரசு மிகவும் பிற்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இ்ந்த விடுதியில் வழங்கப்படும் உணவில் வண்டுகளும் புழுக்களும் காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பலமுறை புகார் தெரிவித்தும் விடுதி காப்பாளரான அந்தோணி ராஜ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.