மக்களுக்கு இலவச காய்கறி பெட்டகம்

மக்களுக்கு இலவச காய்கறி பெட்டகம்

1 mins read

சென்னை: கிராமப்புற மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இலவச காய்கறி விதைப் பெட்டகத்தை வழங்குவதற்காக ரூ.3 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

கிராமப்புற மக்களும் விவசாயிகளும் தங்களது கொல்லையில் காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த முதல்வரின் ஊரக காய்கறி உற்பத்தி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 25 லட்சம் பேருக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காய்கறி பெட்டகம் வழங்கப்பட உள்ளது. இதில் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், அவரை, பூசணிக்காய், பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் விதைகள் இருக்கும். இதற்கான உத்தரவை வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ளார்.