பிளஸ்-2 பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதி நீக்கம்

பிளஸ்-2 பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதி நீக்கம்

1 mins read

சென்னை: சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-2 ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, சமஸ்கிருதம் தமிழ் மொழியை விட தொன்மை யானது என்ற அர்த்தத்தில் அந்த பாடத்தில் கருத்துகள் இடம்பெற்று இருந்தன. தமிழ்நாடு முழுவதும் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் என பலரும் கடும் எதிர்ப்புகளை முன்வைத்தனர்.

இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி ஆங்கில பாடப்புத்தக தயாரிப்பு பணியில் ஈடுபட்ட 13 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதியை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.