ஒரே நாளில் 5 கோயில்களில் கொள்ளை

ஒரே நாளில் 5 கோயில்களில் கொள்ளை

1 mins read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கோயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

நாகர்கோவில் அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து ஐந்து கோவில்களில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கோவில்விளை பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோயில் சிலையில் இருந்து நகை, தங்க காசுகள் உட்பட மூன்றரை பவுன் கொள்ளை போனது.

திருநகர் பகுதியில் உள்ள பாலமுருகன் கோயில், புல்லுவிளை பத்திரகாளியம்மன் கோயில், மற்றொரு முத்தாரம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில் களிலும் உண்டியல் பணத்தைக் காணவில்லை.கேசவன் புதூர் நாராயணசாமி கோயில் உண்டியல் பணம், ஒன்றரை பவுன் நகை கொள்ளைபோனது.

இந்தச் சம்பவங்கள் பற்றி போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.