சாலையில் காணாமல் போன பேருந்து வயலில் நின்றது

சாலையில் காணாமல் போன பேருந்து வயலில் நின்றது

1 mins read

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூருக்குத் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து சேவையாற்றும் அரசு நகரப் பேருந்து இரவு நேரத்தில் கீரனூரில் சாலை ஓரம் நிறுத்திவைக்கப்படும்.

அதிகாலையில் அது தாராபுரத்திற்கு ஓட்டிச்செல்லப்படும். இந்த நிலையில், பணியில் இருந்த ஓட்டுநர் சிவக்குமாரும் நடத்துநரான அமுதனும் பேருந்தை வியாழக்கிழமை இரவில் சாலை ஓரம் நிறுத்திவிட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் படுத்துத் தூங்கினர்.

காலை எழுந்து பார்த்தபோது பேருந்தைக் காணவில்லை. அவர்கள் கீரனூர் போலிசில் புகார் செய்தனர்.

கீரனூரில் இருந்து தாளையூத்து செல்லும் வழியில் 1 கி.மீ. தொலைவில் வயல்வெளியில் இறங்கிய நிலையில் பேருந்து நின்றிருந்ததை போலிஸ் கண்டது.

பிறகு பேருந்து மீட்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

அரசு பேருந்தைத் திருடி யாரோ அதை வயலில் நிறுத்திவிட்டதாக தெரிவித்த போலிஸ், திருடர்களைப் பிடிக்க வேட்டையைத் தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.