சென்னை: நடிகர் விஷாலை கைது செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு முன்னிலையாகாததால் பிணையில் வெளி வர முடியாத கைது ஆணை அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஷால் திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உரிய தொகையை முறையாக செலுத்தவில்லை என்று புகார் கிளம்பியது.
புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆணை அனுப்பியும் விஷால் முன்னிலையாகவில்லை என்ற நிலையில், நீதிமன்றம் அவரைக் கைதுசெய்ய உத்தரவிட்டதாக நேற்று ஊடகங்கள் கூறின.

