வேலூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆம்பூரில் என்எம்இசட் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்புத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
இது பற்றி நேற்று வேலூரில் கருத்து தெரிவித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் வேலூரில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
உரிய அனுமதியைப் பெறாமல் உள்ளரங்கில் ரகசியமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன எனவும் அமைச்சர் கேட்டார்.
ஆம்பூரில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாகக் கூறி, அந்த மண்டபத்தை ஆம்பூர் வட்டாட்சியர் பூட்டிவிட்டார். திருமண மண்டபத்தைத் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

