தஞ்சை: விவசாயத்தைக் காக்கும் அன்னையாக காவிரித் தாய் விளங்குவதால் காவிரி அன்னையைப் போற்றும் வகையிலும் அன்று மாங்கல்யத்தைப் பிரித்து கோர்த்து புதுமணத் தம்பதிகள் அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பதினெட்டாம் பெருக்கு எனப்படும் அந்தப் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், இந்தாண்டு ஆடிப்பெருக்கின்போது வழக்கமான மகிழ்ச்சி காணப்படுமா என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் கரை புரண்டு பாய்ந்ததால் ஆடிப் பெருக்கு வழக்கத்தைவிட வெகு உற்சாகமாகக் கொண்டாப்பட்டது.

