பாலியல் தொல்லை: முதியவருக்கு வாழ்நாள் சிறை

பாலியல் தொல்லை: முதியவருக்கு வாழ்நாள் சிறை

1 mins read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கலிபுல்லா நகரைச் சேர்ந்த அஷ்ரப் அலி, 68, என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அஷ்ரப் அலிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப் பீடாக ரூ.7 லட்சத்தை அஷ்ரப் அலி வழங்கவேண்டும் என்றும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.