கோவை: பாலித்தீன் தாளுடன் தரமற்ற முறையில் குளிர்பானம் தயாரித்து விற்றதாக, கடந்த 2014ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பூர்ணிமா என்பவர் தொடுத்த வழக்கில் கொக்கோ கோலா நிறுவனம், கோவையில் உள்ள ஆதரவற்ற 100 குழந்தைகள், முதியவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சத்துள்ள பழங்களையும் உணவுப் பொருட்களையும் வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டாக நடந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கொக்கோ கோலா நிறுவனத்திற்கு ரூ. 75,000, கடைக்காரருக்கு ரூ. 25,000 என மொத்தம் 1 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தில் கங்கைகொண்டான், திருவள்ளூர் உள்ளிட்ட 6 பகுதிகளில் கொக்கோ கோலா தயாரிப்பு நிலையங்கள் உள்ளன.

