கும்பகோணம்: கும்பகோணம் நான்கு வழி சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சக மாணவனுக்குப் பிறந்த நாள் கொண்டாடிய பிளஸ் 2 மாணவர்களைக் கலைந்து செல்லும்படி சொன்ன கல்யாணசுந்தரம், 35, என்ற அதே பள்ளி ஆசிரியரை (படம்) மாணவர்கள் கண்டபடி தாக்கினர்.
அப்போது அந்த வழியில் வந்த ஒரு போலிஸ்காரர் மாணவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
உடம்பு, முகம் வீங்கி வலியால் அலறிய ஆசிரியர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் பற்றி கும்பகோணம் மேற்கு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியரை இப்படி பள்ளி மாணவர்கள் அடித்துப்போட்ட சம்பவம் அதிர்ச்சி, கவலையை ஏற்படுத்தி உள்ளது.

