கடலோர மாவட்ட பகுதிகளில் சுனாமி ஒத்திகை

கடலோர மாவட்ட பகுதிகளில் சுனாமி ஒத்திகை

1 mins read

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 12 கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நடந்தது.

கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று நடந்த ஒத்திகையில் திடீரென சுனாமி வந்தால் அதில் இருந்து தப்பிப்பது பற்றியும் தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதல்-உதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் கடலோர பாதுகாப்புப் படை பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் விளக்கினர்.

இந்திய கடலோர காவல்படை, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து பேரிடர் மீட்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த மூன்று நாட்களாக நடத்தின. கடைசி நாளான நேற்று சுனாமி ஒத்திகை நடந்தது.