ரூ.2000 கள்ளநோட்டுக் கும்பல்: அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

ரூ.2000 கள்ளநோட்டுக் கும்பல்: அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

1 mins read

அரியலூர்: தமிழகத்தில் கள்ளநோட்டுப் புழக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளைக் கவனமாக பார்த்து வாங்கும்படி காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

அரியலூர் அருகே வாரச்சந்தையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளைக் கொடுத்து ஆடுகள் வாங்கிச்செல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அதிகாரிகளின் எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை வாங்கும் பொதுமக்கள், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ள பாதுகாப்பு அம்சங்கள் அவற்றில் இருப்பதை உறுதி செய்து கவனமாக எச்சரிக்கையுடன் பார்த்து வாங்க வேண்டும் என்று போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கொண்டாயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்ற எழுத, படிக்கத் தெரியாத ஏழை விவசாயி கடந்த மாதம் 28ஆம் தேதி அதிகாலையில் தன் மகனுடன் தனது ஐந்து ஆடுகளை விற்க அவற்றை ஓட்டிச் சென்றார்.

வழியில் அவரை இடைமறித்த வியாபாரி ஒருவர், நான்கு ஆடுகளை 14,700 ரூபாய்க்குப் பேரம் பேசி ஏழு 2000 ரூபாய் நோட்டுகளையும் ஏழு 100 ரூபாய் நோட்டுகளையும் பழனிவேலிடம் கொடுத்து ஆடு

களை வாங்கிச் சென்றார்.

பணத்துடன் வீடு திரும்பிய பழனிவேல், தான் அடகு வைத்து இருந்த நகையை மீட்கப்போனபோதுதான் கள்ளநோட்டுகளைக் கொடுத்து அவர் ஏமாற்றப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

அதை அறிந்ததுமே பழனிவேல் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார்.

பிறகு அக்கம்பக்கத்தினர் அவரை வீட்டில் சேர்த்தனர்.

இந்த விவகாரம் பற்றி போலிசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.