மதுரை: ஆராய்ச்சி மாணவியிடமிருந்து லஞ்சம் வாங்கிய மதுரை அரசுக் கல்லூாி பேராசிாியரை லஞ்ச ஒழிப்புப் போலிசாா் கைது செய்தனா்.
குமாி மாவட்டம், உண்ணாமலை கடையைச் சோ்ந்த ரசல்ராஜ் மதுரை அரசு கல்லூாியில் வரலாற்றுத்துறை பேராசிாியராகப் பணிபுாிந்து வருகிறாா்.
இவரின் வழிகாட்டுதலின்படி புத்தன்சந்தையைச் சோ்ந்த மாணவி கிளாடீஸ் புளோரா பிஎச்டி எனும் ஆராய்ச்சி படிப்பைப் படித்து வருகிறாா்.
இந்த படிப்புக்கான ஆய்வுக் கட்டுரையை மாணவி சமர்ப்பித்த நிலையில், அதற்கு சான்று கொடுக்க ரூ.50,000 பணத்தை அந்த மாணவியிடம் பேராசிரியர் லஞ்சமாகக் கேட்டுள்ளாா்.
படிப்புக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அந்த மாணவி தனது கணவா் விஜீ மோனிடம் நடந்த விஷயத்தைக் கூறியுள்ளாா்.
விஜீ மோனன் நாகா்கோவில் லஞ்ச ஓழிப்பு டிஎஸ்பி மதியழகனிடம் இதுபற்றி கூற, அவா்கள் கொடுத்த ஆலோசனையின் பெயாில் மாா்த்தாண்டத்தில் வைத்து முதல்கட்டமாக பேராசிாியா் ரசல்ராஜிடம் ரூ.25,000 பணத்தை மாணவி கிளாடீஸ் புளோரா லஞ்சமாகக் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலிசாா் பேராசிாியரை பணத்துடன் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
இது கல்லூாி பேராசிாியா்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

