பல கோடி ரூபாயுடன் சிக்கிய லாரி

பல கோடி ரூபாயுடன் சிக்கிய லாரி

1 mins read

அணைக்கட்டு: வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு ேநற்று நடைபெற்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைசூருவில் இருந்து வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியைக் கடப்பதற்காக இரு கன்டெய்னர் லாரிகள் வந்து கொண்டிருந்தன.

அந்த வாகனங்களில் பல கோடி பணம் உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தேர்தல் பறக்கும் படையினர் இதுகுறித்து ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் கூறினார்.

சண்முகசுந்தரம் கன்டெய்னர் லாரியில் இருந்த துப்பாக்கி ஏந்திய போலிசாரிடம் விசாரணை நடத்தியபோது, "மைசூரு ரிசர்வ் வங்கியில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு லாரிகள் செல்வதாகவும் பல கோடி ரூபாய் அதில் கொண்டு செல்வதாகவும் நாங்கள் பாதுகாப்புக்காகச் செல்கிறோம்," என்றும் கூறினார். இதையடுத்து அதற்கான ஆவணங்களைக் காட்டியதால் லாரிகளுடன் ஓட்டுநர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.