நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை பட்டப்பகலில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை கூட்டியுள்ளது. இந்தக் கொலை சினிமாவில் நடப்பது போல் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை பகுதியைச் சேர்ந்த வர் புஷ்பாகரன், 36. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.
இவர் பறக்கையில் இருந்து என்ஜிஓ காலனிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த ஐவர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த புஷ்பாகரன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அக்கும்பல் அவரை விடாமல் ஓடஓட விரட்டி வெட்டியது. பின்னர் ஐவரும் ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.
இதில் புஷ்பாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

