கர்ப்பிணி மரணம்; உறவினர்கள் முற்றுகை

கர்ப்பிணி மரணம்; உறவினர்கள் முற்றுகை

1 mins read

ஆரணி: ஆரணி, மாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துவிட்டதாகக் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த உறவினர்கள் பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் உயிரிழந்துவிட்டதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ந்து, கதறி அழுதனர்.

கர்ப்பிணியின் உறவினர்கள் இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், இருங்கூரைச் சேர்ந்த அரிவிழிவேந்தனின் மனைவி ஜமுனா, 29. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி எடுக்க மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் தாதிகள் பிரசவம் பார்த்தனர். ஜமுனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஜமுனாவிற்கு நஞ்சு குடல் வெளியே வராததால் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜமுனாவிற்கு சிகிச்சை அளித்துள்ளார்.

தொடர்ந்து அதிக ரத்தப்போக்குடன் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு ஜமுனா உயிரிழந்தார்.