இப்போது இல்லை 8 வழிச்சாலை

இப்போது இல்லை 8 வழிச்சாலை

1 mins read
247c5662-a001-4e4b-93a1-f8d2bd0989ba
-

புதுடெல்லி: எட்டு வழிச்சாலை திட்டப் பணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, "சுற்றுச்சூழல் அனுமதி வரும்வரை எட்டு வழிச்சாலை பணியைத் தொடங்க மாட்டோம், சாலை அமைப்பது போன்ற எந்தப் பணிகளும் நடக்காது," என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது.

அனுமதி கிடைக்கும்வரை பணி இல்லை என்றால் நீதிமன்றத்திடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எட்டு வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்கவேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால், விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.