மூக்குப்பொடி தூவி கொள்ளை: தம்பதி தந்திரம் பலிக்கவில்லை

மூக்குப்பொடி தூவி கொள்ளை: தம்பதி தந்திரம் பலிக்கவில்லை

1 mins read

திருச்சி: திருச்சி, துவரங்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்துவந்த பாலசுப்பிரமணியன், 31, என்பவர் தன்னிடம் ரூ.4 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார்.

மூக்குப் பொடியை முகத்தில் தூவி யாரோ சிலர் பணத்தைப் பறித்துச் சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

ஆனால் போலிஸ் விசாரணையில் அவரே தன் மனைவியுடன் சேர்ந்து இந்தக் கொள்ளை நாடகத்தை ஆடியது தெரியவந்தது.

பாலசுப்பிரமணியத்தின் மனைவியான 32 வயது புஷ்பம் தலைமறைவாகிவிட்டார். போலிசார், பாலசுப்பிரமணியன் வீட்டில் சோதனையிட்டு வசூல் தொகை மொத்தத்தையும் கைப்பற்றி அவரைக் கைது செய்தனர்.