மழையில் நிற்கும்படி தண்டனை

மழையில் நிற்கும்படி தண்டனை

1 mins read
a57dea91-1880-4caf-a40d-d2c5353c47a3
-

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள குற்றாலத்தில் செயல்படும் ஸ்ரீபராசக்தி வித்யாலயா பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள், வியாழக்கிழமை சிறப்பு வகுப்பில் கலந்துகொள்வதற்காக பள்ளிக்கூடம் வந்தனர். அவர்கள் வகுப்பில் இருந்தபோது திடீரென்று மின்தடை ஏற்பட்டது.

மாணவர்கள் கசமுச என்று சத்தம் போட்டு ரகளை செய்தனர். இதற்காக 15 மாணவர்களை பள்ளி முதல்வர் சாலையில் கொட்டும் மழையில் நிற்கவைத்து தண்டனை கொடுத்தார்.

வழிப்போக்கர்கள் தலையிட் டதை அடுத்து தண்டனை முடித்துக்கொள்ளப்பட்டது. முதல்வரின் இந்தக் காரியத்தைப் பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர்.