மலையில் உருண்ட பேருந்து: 10 பேர் காயம்

மலையில் உருண்ட பேருந்து: 10 பேர் காயம்

1 mins read

கொடைக்கானல்: மதுரை கோட்டத்துக்குட்பட்ட அரசு பேருந்து கொடைக்கானலில் பள்ளங்கி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

கொடைக்கானலில் 2வது கொண்டை ஊசி வளைவில் நேரிட்ட இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.