வேகமாக நிரம்பும் நீர்த்தேக்கங்கள்

வேகமாக நிரம்பும் நீர்த்தேக்கங்கள்

1 mins read
4136d6e9-95c3-4c55-ae14-8ec93ac7bdb3
கர்நாடகாவிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு 3 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அணை தமிழ்நாட்டின் முக்கியமான பெரிய அணைகளில் ஒன்று. இதன் கொள்ளளவு மொத்தம் 120 அடி. நேற்று நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி கூடி 70 அடியைத் தாண்டியது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பெரிய நீர்த்தேக்கங்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இன்னும் சில நாட்களில் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தில் தேங்கியிருக்கும் நீரில் இந்த நீர்த்தேக்கங்களின் பங்கு 70 விழுக்காடு ஆகும். பொதுப் பணித்துறை 15 பெரிய நீர்த்தேக்கங்களையும் அணைக்கட்டுகளையும் கண்காணித்து வருகிறது.

அவற்றில் 198.28 டிஎம்சி தண்ணீரைத் தேக்க முடியும். இப்போது அவற்றில் 66.84 டிஎம்சி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. தென் மேற்குப் பருவமழையே இதற்குக் காரணம்.

இதே நிலைமை நீடித்தால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த 15 நீர்த்தேக்கங்களும் நிரம்பிவிடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.