முதலீடுளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்லும் முதலமைச்சர்

முதலீடுளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்லும் முதலமைச்சர்

1 mins read

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 5 நாட்டு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க முதல்வர் ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.

புலம்பெயர்ந்த தமிழ்நாட்டுத் தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு முதல்வர் அழைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வருடன் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் செல்ல இருப்பதாகவும் இதற்கான சுற்றுப் பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை நந்தம்பாக்கத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் வெற்றிகரமாக நடத்தினார்.

அந்த மாநாடு மூலம் தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியதாகவும் சில நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.